தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியராக இருக்கும் கவிஞர் வைரமுத்து சமீபத்தில் படிக்காத பக்கங்கள் படத்தின்  இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் ஒரு பாடலில் இசை பெரிதா அல்லது மொழி பெரிதா என்ற விஷயம் தற்போது பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இதில் என்ன சந்தேகம் இருக்கிறது. ஒரு பாட்டுக்கு இசை மற்றும் மொழி இரண்டுமே மிக முக்கியம். மொழி இல்லை என்றால் இசை கிடையாது. இசை இல்லை என்றால் மொழி கிடையாது. இதை புரிந்தவன் ஞானி. இதை புரியாதவன் அஞ்ஞானி என்று கூறினார்.

இவருடைய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இசைஞானி இளையராஜாவை  விமர்சித்து தான் வைரமுத்து அப்படி பேசியதாக சர்ச்சைகள் எழுந்தது. இதன் காரணமாக பாடல் ஆசிரியர் கங்கை அமரனும் இளையராஜாவின் தம்பியுமான கங்கை அமரன் வைரமுத்துவை எச்சரித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் வைரமுத்து ஒரு நல்ல கவிஞர் என்பதை ஒத்துக் கொள்ளலாம். ஆனால் அவர் நல்லவர் கிடையாது. அவரை தடுப்பதற்கு ஆளில்லாததால் இப்படி எல்லாம் செய்கிறார். அவர் இனிமேல் இளையராஜாவை பற்றி அவதூறாக பேசினால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும். இளையராஜா மட்டும் இல்லை என்றால் இன்று வைரமுத்து என்ற பெயரே இருக்காது என்று கூறியுள்ளார். மேலும் கங்கை அமரன் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.