வாரிசு திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வரும் ஜன-11 தேதி வெளியாகவுள்ளது. இந்தநிலையில் வாரிசு திரைப்படத்தை சென்சாரில் பார்த்த நபர் படத்தின் விமர்சனத்தை பதிவு செய்து இருக்கின்றார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, விஜயின் நடிப்பு மிரட்டுகின்றது. எமோஷனலில் சிறப்பாக நடித்திருக்கின்றார். படத்தின் கதை ஒன்றும் புதிதல்ல, இருப்பினும் விறுவிறுப்பாக திரைக்கதை நகர்கின்றது. கதாநாயகி ரஷ்மி திரையில் அழகாக இருக்கின்றார். ரசிகர்களுக்கு நல்ல விருந்து தான் வாரிசு திரைப்படத்தில் ஒளிப்பதிவு. தந்தைக்கும் மகனுக்கும் இடையே இருக்கும் உறவு குறித்தும் தாய்க்கும் மகனுக்கும் இடையே இருக்கும் உறவு குறித்தும் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றது. மேலும் படத்தின் கிளைமேக்ஸ் அருமையாக இருக்கின்றது. படத்தின் முதல் பாதியை சற்று குறைத்து இருக்கலாம். அது படத்தின் நெகட்டிவ் ஆக அமைய வாய்ப்புள்ளது. துணை நடிகர், நடிகைகள் சிறப்பாக நடித்திருக்கின்றார்கள். மொத்தத்தில் பைசா வசூல் தான் வாரிசு என தெரிவித்து 5-க்கு 3.5 என ரேட்டிங் கொடுத்திருக்கின்றார்.