சாகுந்தலம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் சமந்தா. இவர் சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகி இருக்கும் சாகுந்தலம் என்னும் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை குணசேகரன் இயக்கியிருக்கிறார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு மணி ஷர்மா இசையமைத்திருக்கின்றார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் ஜனவரி 9-ம் தேதி நண்பகல் 12.6 மணிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டபடி ட்ரெய்லரை பட குழு வெளியிட்டுள்ளார்கள். இந்த ட்ரெய்லர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.