தங்கலான் திரைப்படம் குறித்து பா.ரஞ்சித் பேட்டி அளித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கின்றார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய பா.ரஞ்சித் தங்கலான் திரைப்படத்தில் நடிக்கும் விக்ரம் தனது தோற்றத்திற்காக நாள்தோறும் 4 மணி நேரம் செலவழித்து வருவதாகவும் ஒவ்வொரு காட்சிகளிலும் அவர் அன்புடனும் ஆர்வத்துடனும் நடித்து வருவதாகவும் தெரிவித்திருக்கின்றார். மேலும் விக்ரமின் கெரியரில் இது ஒரு முக்கிய திரைப்படமாக இருக்கும் எனவும் தெரிவித்திருக்கின்றார். இத்திரைப்படத்தின் படபிடிப்பானது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.