சோகமாக விமான நிலையத்தில் செல்லும் சமந்தாவின் வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவள் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் சகுந்தலம் திரைப்படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது.தற்போது சமந்தா தனக்கு ஏற்பட்ட அரிய வகை நோய்க்காக சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் அதில் இருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றார். இவர் மேல் சிகிச்சைக்காக தென் கொரியாவிற்கு சென்றிருந்தார். இந்த நிலையில் நாடு திரும்பிய சமந்தா மும்பை விமான நிலையத்தில் நடந்து வரும் வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் அவர் வெள்ளை நிற ஸ்லீவ் லெஸ் உடையணிந்து கண்களில் கிளாஸ் கைகளில் ஹேண்ட்பேக் என நடந்து சொல்கின்றார்.

இந்த வீடியோவில் சமந்தா முகத்தில் கொஞ்சம் கூட சந்தோஷமோ சிரிப்போ தெரியவில்லை. முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் சோகமாக செல்கின்றார். மேலும் தன்னோடு செல்பி எடுக்க ரசிகர்களை அனுமதித்து அவர்களிடம் போட்டோ எடுத்து போஸ் கொடுத்தார். ஆனால் அப்போது கூட அவர் சிரிக்கவே இல்லை. இதனைப் பார்த்த ரசிகர்கள் இது பழைய சமந்தாவே இல்லை. அவர் உற்சாகமும் சிரிப்பும் கொஞ்சம் கூட இல்லை நம்ம சமந்தாவுக்கு என்னதான் ஆச்சு? ஏன் இப்படி இருக்காங்க? என கவலையுடன் கேட்டு வருகின்றனர்.