தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வெற்றி மாறன் இருக்கிறார். இவரது முதல் திரைப்படமான பொல்லாதவன் நடப்பு நிலைக்கு மிக அண்மையாகப் படம்பிடித்துக் காட்டியதற்காக மிகவும் பாராட்டைப் பெற்றது. இவரது இரண்டாவது திரைப்படமான ஆடுகளம் 2011ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் குறும்பட போட்டி நிகழ்ச்சியில் இயக்குநர்களுக்கு அறிவுரை கூறிய அவர்,  இயக்குநர் என்ற அழுத்தத்தில் ஒருநாளைக்கு 150 சிகரெட்டுகள் குடிப்பேன். காலேஜ் காலங்களில் ஒருநாளைக்கு 70 சிகரெட் குடித்தேன். இயக்குனர் ஆனபின் அது இரண்டு மடங்காக அதிகரித்தது. இதனால் படங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. ஓடி ஓடி வேலை செய்ய முடியாமல் போனதால் அதை நிறுத்திவிட்டேன்” என தெரிவித்தார்.