ஜெயிலர் திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர்  நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். இத்திரைப்படத்தின் படபிடிப்பானது தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

இத்திரைப்படத்தின் ரஜினியின் முத்துவேல் பாண்டியன் தீம் மியூசிக் சிறப்பு வீடியோ அண்மையில் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இத்தரை படத்தில் மலையாள சினிமாவுலகின் உச்ச நட்சத்திரமான மோகன்லால் இந்த திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கின்றாராம். இந்த திரைப்படத்தில் சினிமாவில் மூத்த உச்ச நட்சத்திரங்களான ரஜினி, மோகன் லால், சிவராஜ் குமார் உள்ளிட்டோர் நடிக்க இருக்கின்றனர். இத்திரைப்படம் குறித்த பல முக்கிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.