துணிவு திரைப்படத்தை ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் டிரைலர் வெளியாகி படுவைரலாகி வருகின்றது. மேலும் வெளியான 16 மணி நேரத்தில் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கின்றது. இந்த நிலையில் துணிவு திரைப்படத்தை ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே..!! எனக் குறிப்பிட்டு இன்சைட் மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் டிரைலரை பகிர்ந்துள்ளார். அந்தத் திரைப்படத்தின் சாயல் துணிவு படம் போல் இருப்பதாக அவர் இப்படி விமர்சித்திருக்கின்றார்.