தளபதி 67 திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67-வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இத்திரைப்படத்தின் பூஜை சென்ற டிசம்பர் 5-ம் தேதி போடப்பட்டது. இத்திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க அனிருத் இசை அமைக்க இருக்கின்றார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது இன்று தொடங்குகின்றது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகும் இந்த படத்தின் ப்ரோமோ விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.