தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். இவர் பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் ஆதிபுருஷ் மற்றும் சலார் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகர் பிரபாஸுக்கு தற்போது 43 வயது ஆகும் நிலையில், அவருடைய திருமணம் பற்றி தான் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இல்லை என்று பிரபாஸ் கூறி வருகிறார். நடிகை அனுஷ்காவும், நடிகர் பிரபாஸும் காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில், இருவருமே அந்த தகவல் உண்மை இல்லை என்று மறுத்து விட்டனர். அதன் பிறகு பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனும் பிரபாஸும் காதலிப்பதாகவும் டேட்டிங்கில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

ஆனால் நடிகை கீர்த்தி சனோன் அந்த தகவல்களை மறுத்திருந்தார். இந்நிலையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் டிவி நிகழ்ச்சியில் நடிகர் பிரபாஸ் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நீங்களும் கீர்த்தி சனோனும் காதலிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அதற்கு பிரபாஸ் நானும் கீர்த்தியும் காதலிக்கவில்லை. ஏற்கனவே இந்த வதந்திக்கு கீர்த்தி முற்றுப்புள்ளி வைத்து விட்டார் என்று கூறினார். இதனால் கீர்த்தி மற்றும் பிரபாஸ் காதலிப்பதாக  வெளியான தகவல் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் நடிகர் பிரபாஸ் எப்போது திருமணம் குறித்த தகவலை அறிவிப்பார் என்று அவருடைய ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.