ஸ்ரீதிவ்யா விக்ரம் பிரபுவுடன் நடிக்கும் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா உலகில் சென்ற 2013-ம் வருடம் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. முன்னதாக இவர் குழந்தை நட்சத்திரமாகவும் தெலுங்கு திரையுலகில் ஹீரோயினாகவும் வலம் வந்தார். தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தையடுத்து ஜீவா, காக்கிச்சட்டை, மருது, பென்சில் என பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இவர் தமிழில் கடைசியாக சங்கிலி புங்கிலி கதவ தொற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன்பின் இவர் பல திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீண்ட நாட்கள் ஆக நடிக்காமல் இருந்த இந்த நிலையில் தற்போது விக்ரம் பிரபுவுடன் இணைந்த ரெய்டு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தின் போஸ்டர் நேற்று வெளியாகி உள்ளது.