கியாரா அத்வானியின் திருமணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது தெலுங்கு திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் ஹீரோவாக ராம்சரண் நடிக்க ஹீரோயினாக கியாரா அத்வானி நடிக்கின்றார். கியாரா அத்வானியும் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோப்ராவும் காதலித்து வந்த நிலையில் அண்மையில் திருமணம் குறித்து அறிவித்தார்கள்.

இதில் இவர்களின் திருமணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது. இவர்கள் வருகின்ற பிப்ரவரி 6-ஆம் தேதி ஜெய்சல்மர் நட்சத்திர ஹோட்டலில் தங்களின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது.