ஆன்லைன் மூலம் தொழிலதிபரிடம் 16 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளார்கள்.

சென்னை மாவட்டத்தில் உள்ள சூலூர்பேட்டையை சேர்ந்த ஷேக் பைரோ பாட்ஷா என்பவர் தொழிலதிபராவார். இவர் சொந்தமாக நிறுவனம் நடத்தி வருகின்ற நிலையில் தனது நிறுவனத்திற்கு ஜெனரேட்டர் தேவைப்பட்டதால் ஆன்லைனில் வந்த விளம்பரத்தை பார்த்து சென்னையில் உள்ள அம்பத்தூரில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு போனில் தொடர்பு கொண்டு இருக்கின்றார். அப்போது அகல்யா என்ற பெண் தங்கள் கம்பெனியில் தரம் வாய்ந்த ஜெனரேட்டர் குறைந்த விலைக்கு இருப்பதாக தெரிவித்தார்.

இதனால் அவர் ஜெனரேட்டர் வாங்குவதற்காக ஆறு தவணைகளாக 16 லட்சம் வங்கி மூலமாக செலுத்தி இருக்கின்றார். ஆனால் ஜெனரேட்டர் தராமலேயே இருந்துள்ளார்கள். இதனால் சந்தேகம் அடைந்த அவர் அம்பத்தூருக்கு நேரில் சென்று விசாரித்த போது அப்படி ஒரு முகவரியில் அங்கு கம்பெனி இல்லை என்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அகல்யாவை தொடர்பு கொண்டு பணத்தை திரும்பத் தருமாறு கேட்டு இருக்கின்றார். அதற்கு அகல்யா பணமும் கிடையாது பொருளும் கிடையாது எனக் கூறியதோடு கொலை மிரட்டலும் விடுத்திருக்கின்றார். இதனால் ஷேக் பைரோ பாட்ஷா காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கின்றார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அகல்யாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.