சென்ற வருடம் 42 பேரிடம் ஆன்லைன் மோசடி நடந்ததாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசும்போது, சைபர் கிரைம் தொடர்பாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. இதில் 3 கோடியே 67 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளார்கள்.

மேலும் 70 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மீட்கப்பட்டு பணத்தை இழந்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. மேலும் 17 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். தற்போது மீதமுள்ள பணத்தை மீட்கும் பணியானது நடைபெற்று வருகின்றது.