இளைஞர்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும் சிக்ஸ் பேக் வைத்துக் கொள்ளவும் ஜிம்முக்கு செல்வது வழக்கம். ஆனால் வயது போக போக ஜிம்முக்கு செல்வதை  தொடர்வார்களா என்று கேட்டால் அது குறைவுதான். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஜிம்  ஆரிங்டன் என்பவர் தனது 90 வயதிலும் ஜிம்முக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இவர் பல்வேறு பாடிபில்டர் போட்டிகளிலும் பங்கேற்றது மட்டுமில்லாமல் பல பரிசுகளையும் பெற்றுள்ளார். இது குறித்து ஜிம்  ஆரிங்டன் பேசுகையில், தான் பிறக்கும்போது எடை குறைவாக இருந்ததாகவும் அடிக்கடி நோய்வாய்ப்பட்டதாகவும் கூறியவர் அவரது 15 வயதில் ஜிம்முக்கு செல்ல தொடங்கி இப்போது வரை தொடர்ந்து செல்வதாக கூறியுள்ளார்.