நாம் வீடு வாடகைக்கு, கடை வாடகைக்கு, பொருட்கள் வாடகைக்கு விடுவதை பார்த்திருப்போம். ஆனால் ஒரு நாட்டில் இளைஞர்களுக்காக காதலிகளை வாடகைக்கு விடுகின்றனர். அதுவும் அந்த நாட்டின் அரசே இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜப்பானில் தனிமையில் வாடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் இத்தகைய திட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டுவந்துள்ளது. இளைஞர்கள் குறிப்பிட்ட இணையதளம் மூலமாக தனக்கான காதலியை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இதில் சில விதிமுறைகள் உள்ளது.

இணையதளத்திற்கு 1200 ரூபாய் கட்டணமாக அந்த இளைஞர் செலுத்த வேண்டும். அதேபோன்று அவர் தேர்ந்தெடுக்கும் காதலிக்கு ஒரு மணி நேரத்திற்கு 3000 ரூபாய் என்று குறைந்தது 2 மணி நேரமாவது அவர் வாடகைக்கு எடுக்க வேண்டும். அவர் வாடகைக்கு எடுக்கும் காதலியிடம் நேராக தொடர்பு கொண்டு பேசக்கூடாது.

அதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் செயலி மூலமாகவே அவர்கள் தொடர்பில் இருக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் எந்த பரிசுப் பொருட்களையும் வாடகை காதலியிடம் இருந்து வாங்க கூடாது என பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இதனை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் இது குறித்து பரபரப்பாக விமர்சனங்களை அடுக்க துவங்கி விட்டனர்.