பிரேசிலில் ஒரு மணி நேரத்திற்கு 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக ஆய்வு அறிக்கை மூலம் தெரிந்துள்ளது. Brazilian Forum of Public Security அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் 74,930. பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 2022 ஆம் ஆண்டில் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் 14 வயதிற்கும் குறைவானவர்கள் என்றும் 10 சதவீதத்திற்கு மேல் நான்கு வயதிற்கும் குறைவானவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும் 2021 ஆம் ஆண்டை விட  8.2% அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் 70 சதவீத பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் வைத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.