தேர்வு மதிப்பெண்கள் என்றாலே ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்ளும் நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ மாணவர்களின் இரண்டு வெவ்வேறு மனநிலைகளை மிக நகைச்சுவையாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அந்த வீடியோவில், ஒரு மாணவி 90 சதவீத மதிப்பெண்களைப் பெற்றும், தான் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருக்கிறார்.

ஆனால், அதே வீடியோவின் அடுத்த காட்சியில் ஒரு மாணவன் வெறும் 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்ததற்கே, ஏதோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது போல கையில் இனிப்புப் பெட்டியுடன் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறான்.

அங்கிருந்த பெண் ஒருவர், “தம்பி, நீ உண்மையிலேயே சந்தோஷமா இருக்கியா?” என்று கேட்க, அந்த மாணவனோ எவ்வித கவலையுமின்றி தனது வெள்ளந்திச் சிரிப்புடன் “ஆமாம்” என்று பதிலளிக்கிறான்.

“வாழ்க்கை என்பது மதிப்பெண்களில் இல்லை, நாம் அதை எப்படி அணுகுகிறோம் என்பதில் தான் இருக்கிறது” என இந்த வீடியோவை பகிரும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

குறிப்பாக, “சின்ன சின்ன விஷயங்களிலும் மகிழ்ச்சியைத் தேடும் பசங்களோட ஸ்டைலே தனி தான்” என இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.