தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக தவெக விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் தொண்டர்கள் மாநிலம் முழுவதும் வெற்றிக் கொண்டாட்டங்களில் மூழ்கியுள்ளனர். விரைவில் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள சூழலில், சென்னை ராயபுரத்தில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ விஜய் தாமுவின் செயல் இப்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அவர், கத்தியால் கேக் வெட்டுவதற்குப் பதிலாக, ஒரு பெரிய வாளைக் கொண்டு கேக்கை வெட்டியுள்ளார்.
ராயபுரத்தில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தவெக எம்எல்ஏ விஜய் தாமு pic.twitter.com/Xp5FKJUcu5
— DMK IT WING (@DMKITwing) May 6, 2026
அங்கிருந்த தவெக நிர்வாகி லயோலா மணி என்பவர், “வாளால் கேக் வெட்ட வேண்டாம்” என்று தடுத்தும், அதைக் கேட்காத விஜய் தாமு உற்சாகமாக வாளால் கேக்கை வெட்டித் தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. தமிழகத்தில் புதிய அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுப்பதாக விஜய் கூறிவரும் நிலையில், அவரது கட்சி எம்எல்ஏ ஒருவரே வாளுடன் பிறந்தநாள் கொண்டாடியிருப்பது தவெக தலைமைக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
