தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளில் திமுக கூட்டணி பெரும் சரிவைச் சந்தித்துள்ள நிலையில், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் (MP) மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒற்றை வரி, தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியாகி திமுக ஆட்சி அதிகாரத்தை இழந்துள்ள சூழலிலும், காங்கிரஸ் கட்சி தவெக அரசுக்கு ஆதரவளிப்பது குறித்து டெல்லி மேலிடம் தீவிரமாகக் காய் நகர்த்தி வரும் வேளையிலும், “தோற்றாலும் தோல்வியில்லை நம்மிடம்” என மாணிக்கம் தாகூர் மிகவும் தத்துவார்த்தமாகவும் அதே நேரத்தில் அரசியல் உள்நோக்கத்தோடும் பதிவிட்டுள்ளார்.

“>

 

திமுக கூட்டணி தோல்வியைத் தழுவினாலும், ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் தமிழகத்தின் புதிய அரசியல் மாற்றத்திலும், அமையவிருக்கும் புதிய ஆட்சியிலும் கிங் மேக்கராகக் காங்கிரஸ் உருவெடுக்கும் என்ற நம்பிக்கையில்தான் அவர் இப்படிப் பதிவிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தொண்டர்களுக்குப் புத்துணர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ள இந்த வைரல் பதிவு, தற்போது சோஷியல் மீடியாவில் செம ட்ரெண்டாகி வருகிறது.