பொதுவாக வங்கிகளுக்கு பண்டிகை நாட்கள் மட்டும் வார இறுதி நாட்களில் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த பண்டிகை தின விடுமுறை ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப மாறுபடும். அதாவது எந்தெந்த மாநிலங்களில் பண்டிகை தினம் கொண்டாடப்படுகின்றதோ அந்த மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்படும். அதன்படி இந்த மாதத்தில் மட்டுமே மொத்தம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆறு நாட்கள் விடுமுறை முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் 9 நாட்கள் விடுமுறை உள்ளது.

  • 18 அக்டோபர் – கதி பிஹு காரணமாக அஸ்ஸாமில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • 19 அக்டோபர்- சம்வத்சரி திருவிழா காரணமாக குஜராத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • 21 அக்டோபர் – துர்கா பூஜை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
  • 22 அக்டோபர் – ஞாயிறு விடுமுறை
  • 23 அக்டோபர் – மகா நவமி, ஆயுத பூஜை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
  • 24 அக்டோபர் – தசரா, விஜயதசமி, துர்கா பூஜை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
  • 25 அக்டோபர் – துர்கா பூஜை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
  • 26 அக்டோபர் – துர்கா பூஜை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
  • 27 அக்டோபர் – துர்கா பூஜை காரணமாக அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
  • 28 அக்டோபர் – நான்காவது சனிக்கிழமை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
  • 31 அக்டோபர் – சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் காரணமாக குஜராத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை