முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று 70 ஜோடிகளுக்கு முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணம் நடத்தி வைத்துள்ளார். மேலும் இந்த 70 ஜோடிகளுக்கும் கட்டில், பீரோ, பண்ட பாத்திரம் என சகல விதமான சீர்வரிசை பொருட்களும் குறை இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மணமக்களுக்கு சொனாட்டா கைக் கடிகாரம் ஒன்றையும் முதல்வரின் மனைவி அன்பளிப்பாக அளித்துள்ளார். இத்திருமண விழாவில் 70 மணமக்களின் உறவினர்களும் பங்கேற்றனர். இதேபோன்று திருமண விழாவில் பங்கேற்றவர்களுக்கு அறுசுவை காலை உணவும் வழங்கப்பட்டது.