தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சி தலைவர் அண்ணாமலை பேசும் போது, திமுக அமைச்சர்கள் எம்எல்ஏ வைத்திருக்கக்கூடிய இன்ஜினியரிங் காலேஜ். இன்ஜினியர் காலேஜ் நமக்கு முக்கியம் கிடையாது. அது முப்பது நாற்பது கோடி ரூபாய் தான். அந்த இன்ஜினியரிங் காலேஜ் ஓட சேர்த்து வாங்கி போட்டு இருக்க கூடிய 150 ஏக்கர் நிலம். வளைச்சு, வளைச்சு கட்டிப்போட்டு, பிரைவேட் மருத்துவ கல்லூரி. அதனால நீட் வேண்டாம். ஒன்றொன்றையும், ஒன்றொன்றையும் பேச வேண்டிய நேரம்.

2024 பாராளுமன்றத் தேர்தலில் மோடி ஐயாவுக்கு நாம வாக்களிக்கும் போகும் பொழுது மக்கள் கேட்கக்கூடிய ஒரே கேள்வி. 2 லட்சம் கோடி ரூபாயா ? இல்லை பாரதிய ஜனதா கட்சியா ? என்பதுதான் மக்கள் கேட்கக்கூடிய கேள்வியாக இருக்கும். இதை நாம் கேட்க வேண்டும். இரண்டு தலைமுறை மொத்தமாக அழிந்து இருக்கிறது. இன்னும் யாரும் மேல வரல. ஏழைகள் ஏழைகளாக இருக்கிறார்கள்,  நடுத்தர மக்கள், நடுத்தர மக்களாக இருக்கின்றார்கள். அப்பப்ப இலவசம் என்று ஒரு நாலு விஷயத்தை தூக்கிப்போட்டு,  எலக்சன் அப்போ நாலு பணத்தை கொடுத்து, ஆட்சிக்கு வராங்க. உண்மையான முன்னேற்றம் திருப்பூருக்கு வந்திருக்கு என்றால் ? அது அரசால் வரவில்லை.

உங்கள் உழைப்பால் வந்து இருக்கு. 1983இல் 50 கோடி ரூபாய் வருமானம் இருந்த இந்த ஊரு, இன்னைக்கு எக்ஸ்போர்ட் மட்டுமே 50,000 கோடி ரூபாய்க்கு இந்த மாநகரம் செய்து கொண்டிருக்கிறது. இதற்கு எந்த அரசும் வந்து சொந்தம் கொண்டாட முடியாது. நான் வந்து முதலமைச்சராக இருக்கும் போது… நான் அமைச்சராக இருக்கும் போது….. திருப்பூரிலே உட்கார்ந்து…..  இங்கே தூங்கி நான் உங்களை வளர்த்து விட்டேன் என சொல்ல முடியாது. நீங்க தூங்காம உழைச்சி வளர்த்தது அது. இதில் அரசியல்வாதிகள் சொந்தம் கொண்டாடுவதற்கு எல்லாம் யாருக்கும் உரிமை கிடையாது என தெரிவித்தார்.