இந்தோனேசியாவின் டெர்னேட் நகருக்கு அருகே சுமார் 1201 கி.மீ தொலைவில் இன்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால், அப்பகுதியில் உள்ள ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. இதுவரை உயிர்ச் சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், மீட்புப் பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக இந்தோனேசியா மட்டுமல்லாமல், அண்டை நாடுகளான மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் திடீரென உயரக்கூடும் என்பதால், கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட சுனாமி பேரழிவுகளை மனதில் கொண்டு, அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த இயற்கைச் சீற்றம் ஒட்டுமொத்த தென்கிழக்கு ஆசியாவையும் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
