நடிகர் நாகார்ஜூனா தனது 66 வயதிலும் மிகவும் இளமையாகவும், மிடுக்காகவும் இருப்பதன் ரகசியத்தை அவருடைய தனிப்பட்ட மேக்கப்மேன் பகிர்ந்துள்ளார். வாரத்தில் ஐந்து நாட்கள் மிகவும் மிதமான உணவையே எடுத்துக்கொள்ளும் அவர், பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
காலையில் ஒரு இட்லி, வடை மட்டுமே சாப்பிடும் அவர், மதிய உணவில் வெண்டைக்காய் மற்றும் சூடான சிப்ஸ் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அசைவ உணவுகளை வார இறுதி நாட்களில் மட்டுமே அளவோடு எடுத்துக் கொள்கிறார். நாகார்ஜூனாவின் அடர்த்தியான தலைமுடி மற்றும் ஆரோக்கியத்திற்கு அவர் தினமும் குடிக்கக்கூடிய ஒரு சிறப்பு ஜூஸ் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
எலுமிச்சை, நெல்லிக்காய், கேரட், பீட்ரூட் ஆகியவற்றுடன் வெல்லம் மற்றும் தேன் கலந்து தயாரிக்கப்படும் இந்த ஜூஸை அவர் தவறாமல் குடிக்கிறார். இதனால்தான் அவருக்கு முடி கொட்டும் பிரச்சனை இல்லை என்றும், படப்பிடிப்புகளில் அவர் விக் பயன்படுத்துவதில்லை என்றும் மேக்கப்மேன் தெரிவித்துள்ளார். முறையான உடற்பயிற்சியும், இந்த உணவுப் பழக்கமுமே அவரை இன்னும் இளம் கதாநாயகர்களுக்குப் போட்டியாக வைத்திருக்க உதவுகிறது.
