நடிகர் விஜயின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ இணையத்தில் சட்டவிரோதமாக வெளியான சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், ஒரு ஃப்ரீலான்ஸ் உதவி எடிட்டர் மூலமாகவே படம் சமூக வலைதளங்களில் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே, இப்படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் எடிட்டர் யூனியனில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

படம் கசிந்ததற்கு அவர் நேரடி காரணம் இல்லை என்றாலும், சங்க விதிகளை மீறி உறுப்பினராக இல்லாத ஒருவரை உதவியாளராகப் பயன்படுத்தியது மற்றும் பணியில் கவனக்குறைவாக இருந்தது ஆகிய காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எடிட்டர் யூனியனின் இந்த அதிரடி முடிவு திரையுலகினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.