தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்துவிட்டு நடிகை த்ரிஷா காரில் ஏறியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

குறிப்பாக, அவரது காரின் முன்பக்கக் கண்ணாடியில் தொங்கவிடப்பட்டிருந்த ‘சிலுவை’  அடையாளம் கொண்ட செயின் நெட்டிசன்களின் பார்வையில் பட, அதுவே இப்போது பேசுபொருளாகியுள்ளது. இந்து மதத்தைச் சேர்ந்த த்ரிஷா, ஏன் தனது காரில் கிறிஸ்துவ மத அடையாளத்தை வைத்துள்ளார் எனச் சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இதனால் “த்ரிஷா ரகசியமாக மதம் மாறிவிட்டாரா?” அல்லது “அனைத்து மதங்களின் மீதும் கொண்ட மரியாதையால்தான் இதை வைத்துள்ளாரா?” என இருவேறு தரப்பினர் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். தேர்தல் நாளில் த்ரிஷாவின் வைரல் புகைப்படத்தால் கிளம்பிய இந்த மத ரீதியான சர்ச்சைகள் கோலிவுட் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக் ஆக மாறியுள்ளது.