தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்த விவகாரம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டிருந்த சூழலில், முழு படமும் ஆன்லைனில் லீக் ஆனது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த விவகாரத்தில் எடிட்டிங் தரப்பிலிருந்து தகவல் கசிந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பிரதீப் ராகவை திரைப்பட எடிட்டர்கள் சங்கத்திலிருந்து நீக்கி சங்கம் உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மக்களின் கவனத்தை ஈர்க்க விஜய்க்குத் தெரிந்தே இந்தப் படம் கசியவிடப்பட்டதா என்ற புதிய சர்ச்சையும் தற்போது கிளம்பியுள்ளது.