தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வருகின்ற ஜூலை 10 ஆம் தேதி முதல் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் வினாடி வினா நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப ஆய்வக ஒருங்கிணைப்பு ஆசிரியர்களுக்கு இணையவழி பயிற்சி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சி முடிவடைந்த பிறகு ஜூலை 10 முதல் வினாடி வினா நிகழ்வுகள் அனைத்து பள்ளிகளிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.