இந்தியாவிடம் அடைந்த தோல்வியை ஜீரணிக்க முடியாமல், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் திட்டமிட்டபடி ஆத்திரமூட்டும் சைகைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

2025 ஆசியக் கோப்பையின் சூப்பர்–4 போட்டியில் இந்தியா எதிராக பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஹாரிஸ் ரவூப் “6-0” என்ற சைகையை காட்டினார். இது, ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியாவின் 6 ரஃபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் வெளியிட்ட தவறான அறிக்கையை நினைவுபடுத்தும் வகையில் செய்யப்பட்டது.

இதுவரை எந்த ஆதாரத்தையும் வெளியிடாத போதிலும், பாகிஸ்தான் அரசு அந்த பொய்யான தகவலை உண்மையாக காட்ட முயற்சித்து வருகிறது. ரவூப்பின் மனைவியும் இந்த “6-0” சைகையை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, “போட்டியில் தோற்றாலும், போரை வென்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.

“>

இதேபோல, பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் வீராங்கனைகள் நஷ்ரா சந்து மற்றும் சித்ரா அமீன் ஆகியோரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் “6-0” சைகையை காட்டியுள்ளனர். இது தொடர்பாக சில பத்திரிகையாளர்கள், அவர்கள் தங்களது தனிப்பட்ட ஆட்ட திறனை கொண்டாடியதாக கூறினாலும், இந்தியாவை குறிவைத்தே இந்த சைகைகள் செய்யப்பட்டவை என்பது தெளிவாகிறது.

“>

மேலும், இலங்கையில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான SAFF கால்பந்து போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய பாகிஸ்தான் வீரர் முகமது அப்துல்லா கூட கோல் அடித்தவுடன் ரஃபேல் போர் விமானம் விபத்துக்குள்ளானது போல் சைகை செய்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இருந்தபோதிலும், அந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 3–2 என்ற கணக்கில் தோற்கடித்து வெற்றி பெற்றது.

“>

இந்த சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், இந்திய இணையவாசிகள் “போராக இருந்தாலும் சரி, போட்டியாக இருந்தாலும் சரி, இந்தியா வெற்றிபெறும்” எனத் தங்கள் கருத்துகளை வலியுறுத்தி வருகின்றனர்.