ஆசியக் கோப்பை 2025 சூப்பர்–4 சுற்றில் இந்தியா–பாகிஸ்தான் மோதலில் உருவான பரபரப்பு தொடர்கிறது. கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இந்த போட்டியில், பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ரவூப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் விளையாட்டு ஆட்ட நெறிமுறைகளை மீறிய வகையில், இந்திய ரசிகர்களைத் தூண்டும் வகையில் சைகைகள் செய்ததாகக் கூறப்படுகிறது.
Hard Celebration..🔥🥵🇵🇰#PAKvIND #PakistanCricket pic.twitter.com/KeKSj9Zxkx
— Shazzz Ki م (@MemesByShazzz) September 21, 2025
“>
இதில், ஃபர்ஹான் ‘துப்பாக்கி ஏந்தி சுடுவது போல் (gun) செலிபிரேஷன்’ செய்ததும், ஹாரிஸ் ரவூப் “6-0” சைகையைச் செய்ததும் குறிப்பிடத்தக்கவை. இதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), இருவருக்கும் எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு (ICC) அதிகாரபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளது.
Last night, if anyone didn’t disappoint, it was Sahibzada and Haris Rauf — with his celebration style and the way he silenced the crowd in the ground, just like a Rafale being shot down.#PAKvIND|#INDvPAK#PakistanCricketpic.twitter.com/VQmPbnbAcQ
— BABAR🐐 (@BABAR9492) September 22, 2025
“>
மாறாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீது எதிர்வினை தெரிவித்துள்ளது. போட்டியின் போது அவர் காட்டிய நடத்தை “விளையாட்டு ஒழுக்கம்”க்கு எதிரானது எனக் கூறி, அதிகாரபூர்வமான எதிர்ப்பு மனுவை ICC-க்கு அனுப்பியுள்ளது.
தகவலின்படி, BCCI தனது முறைப்பாட்டை கடந்த புதன்கிழமை மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்தது. ரவூப் மற்றும் ஃபர்ஹான் குற்றச்சாட்டுகளை மறுக்குமானால், ICC ரெஃபரியான ரிச்சி ரிச்சர்ட்சனின் முன்னிலையில் நேரில் சந்தித்து விளக்கமளிக்க நேரிடும்.
இந்நிலையில், இரு தரப்புகளும் ஒருவர்மேல் ஒருவர் குற்றஞ்சாட்டி வந்துள்ள நிலையில், ICC இதற்குத் தேவையான நடவடிக்கையை எப்போது எடுக்கப்போகிறது என்பதிலேயே ரசிகர்கள் கவனம் நீடிக்கிறது.
