இந்திய அணியின் கேரளா வீரரும், பன்முகத் திறன் கொண்ட பேட்ட்ஸ்மனுமான சஞ்சு சாம்சன், அணியில் தொடர்ந்து மாற்றம் காணப்படும் தனது பேட்டிங் நிலையைப்பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு கருத்து தெரிவித்தார்.
“நான் நடிகர் மோகன்லாலைப் போல் இருக்க விரும்புகிறேன். கேமரா முன் அவர் எவ்வாறு வெவ்வேறு வேடங்களில் திகழ்கிறாரோ, அதுபோல் அணிக்காக தேவையான எந்த வேடத்திலும் விளையாடத் தயார்” என அவர் தெரிவித்தார். அணிக்காக வில்லனாகவோ, ஜோக்கராகவோ, ஹீரோவாகவோ இருப்பதில் எனக்கு கவலை எதுவுமில்லை என்றும் கூறினார்.
ஆனால், ஆசியக் கோப்பை 2025 தொடரில் சஞ்சுவுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் மற்றும் பேட்டிங் வரிசையில் அவரது இடமாற்றம் குறித்து ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
SANJU MOHANLAL SAMSON 😂🔥
– Must watch Interview from 1:03, talking about his best position in T20I. pic.twitter.com/anxLrVtwJb
— Johns. (@CricCrazyJohns) September 24, 2025
“>
மஞ்ச்ரேக்கருக்கும் ‘சஞ்சு மோகன்லால் சாம்சனுக்கும்’ இடையேயான பரிமாற்றம் எப்படி நடந்தது என்பது இங்கே:
சஞ்சய் மஞ்ச்ரேக்கர்: எளிதான கேள்விகள் போதும். கடைசியாக ஒரு கேள்வி. உங்களிடம் மூன்று டி20 சதங்கள் உள்ளன, அவை மூன்றும் தொடக்க இடத்தில் வருகின்றன. அவ்வளவுதான்.
சாம்சன்: அது ஒரு கேள்வின்னு நினைச்சேன்.
மஞ்ச்ரேக்கர்: உங்களுக்கு எந்த நிலையில் மிகவும் வசதியாக இருக்கிறது?
சாம்சன்: ஆமா, சமீபத்துல, நம்ம லாலேட்டன் – மோகன்லால், கேரளாவைச் சேர்ந்த சினிமா நடிகர், அவருக்கு நாட்டிலிருந்து ஒரு பெரிய விருது கிடைச்சுது. அவர் கடந்த 30-40 வருஷமா நடிச்சுட்டு இருக்காரு. நானும் என் நாட்டுக்காக கடந்த 10 வருஷமா நடிச்சுட்டு இருக்கேன்.
அதனால, எனக்கு ஹீரோ வேடம் மட்டும்தான் பண்ண முடியும்னு சொல்ல முடியாது. எனக்கு வில்லன் வேடம் வேணும், ஜோக்கரா வேணும். நான் நடிக்கணும். நான் ஒரு ஓப்பனரா ரன் அடிச்சிருக்கேன்னு சொல்ல முடியாது, டாப் 3ல ரொம்ப நல்ல விளையாடியிருக்கேன் . இதையும் ட்ரை பண்ணுவோம் . ஏன் நான் ஒரு நல்ல வில்லனா இருக்கக் கூடாது?
கடந்த ஆண்டுகளில் மூன்று சதங்களை அடித்திருந்த சஞ்சு, ஷுப்மான் கில் திரும்பிய பிறகு தொடக்க வீரராக உள்ள இடத்தை இழந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்தாவது இடத்தில் 17 பந்துகளில் 13 ரன்களே எடுத்தார்; வங்கதேசத்துடன் நடந்த போட்டியில் 8வது இடத்திற்கு தள்ளப்பட்ட அவர், வாய்ப்பு இல்லாமல் நிலையில்லாமல் நின்றார்.
இதனால், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சஞ்சுவை புறக்கணிக்கிறார் என விமர்சனங்கள் வலுத்துள்ளன. ரசிகர்களின் ஆதரவு, சஞ்சுவின் நிலைப்பாடு உணர்வாக இருந்தாலும், பேட்டிங் வரிசையில் ஏற்படும் குழப்பம் இந்திய அணியின் நீடித்த போட்டித்திறனை பாதிக்கக்கூடும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
