தமிழ்நாட்டில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் இருந்து காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளுக்கு பொது வினாத்தாள்கள் வழங்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, 12 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் வழங்கும் பழைய நடைமுறையே பின்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வரை பொதுத்தேர்வு தவிர்த்து, மற்ற தேர்வுகளுக்கு மாவட்ட அளவில் ஆசிரியர்கள் குழு அமைக்கப்பட்டு வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.