உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்வேறு ராஜ்ய சபா உறுப்பினர்கள் ஏப்ரல் மாதம் 2ஆம்  தேதி அன்று  பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்கள். அதைப் போலவே ராஜஸ்தான் மற்றும் ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களில் பல உறுப்பினர்கள் ஏப்ரல் 3ஆம்  தேதி அன்று பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்கள். இந்த காலியிடங்களுக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மொத்தம் 15 மாநிலங்களிலேயே 56 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தல் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலே பீகார் மாநிலத்திலேயே 6  இடங்கள் மற்றும் உத்தரப்பிரதேசத்திலேயே 10 இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோலவே மகாராஷ்டிரா மாநிலத்திலும் 6  இடங்கள் காலியாகின்றன.  மேற்குவங்க மாநிலத்தில் 5  இடங்கள் காலி ஆகின்றன.

ஒரிசா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலே தலா 3 இடங்கள் காலி ஆகின்றன. அதேபோலவே கர்நாடகா மாநிலத்தில் 4  இடங்கள் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் 5  இடங்கள் காலி ஆகின்றன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது.  சமீபத்தில் மத்திய பிரதேசம்,  ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலே பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதால்,  அந்த மாநிலங்களிலே அந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

அதேபோலவே உத்தரப்பிரதேசம் மாநிலத்திலும் வெற்றிவாய்ப்பு அதிகமாக இருக்கிறது.  நிதீஷ்குமார் தற்போது NDA பக்கம் வந்துள்ளதால் அந்த கட்சிக்கும்,  பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலே காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி  வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

அதேபோல தெலுங்கானாவிலும் சமீபத்திலே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருப்பதால்,  அங்கு நடைபெற உள்ள மூன்று காலியிடங்களுக்கான தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆகவே மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மாநிலங்களவையிலேயே 56 இடங்கள் காலியாகின்றன. அதற்கான முக்கிய தேர்தல் 27-ம் தேதி நடைபெறுகிறது. ஆகவே மக்களவை தேர்தலை வைத்து பார்க்கும் போது இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இருக்கும் என கருதப்படுகிறது.