அமெரிக்கா விதித்த 50% வரி – எதிர்வினை இந்தியாவிலிருந்தே

இந்தியா மீது அமெரிக்கா 50 சதவிகித வரி விதித்ததையடுத்து, இந்தியாவில் நீண்ட காலமாகச் செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் பின்னடைவை சந்திக்கக்கூடும் என கூறப்படுகிறது. பெப்சி, கோகோ கோலா, மெக்டொனால்டு, கேஎஃப்சி, சப்வே உள்ளிட்ட பிரபல அமெரிக்க நிறுவனங்கள் இந்திய சந்தையில் வியாபாரிக்களமாக வேரூன்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டுமென்று சமூக வலைதளங்களில் வேகமாக பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இது அமெரிக்காவிற்கே பெரும் பொருளாதார சவாலாக அமையும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

புறக்கணிப்பு அச்சுறுத்தலில்  நிறுவனங்கள்

மேற்குவங்கம் மற்றும் தென்னிந்தியாவில் மெக்டொனால்ட்ஸை இயக்கும் ‘வெஸ்ட்லைஃப் ஃபுட் வேர்ல்ட் லிமிடெட்’ நிறுவனம், 2024 நிதியாண்டில் ரூ.2,390 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. அதே நேரத்தில், பெப்சிகோ நிறுவனம் மட்டும் இந்தியாவில் ரூ.8,200 கோடி வருவாயைப் பதிவு செய்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய சந்தையில் மட்டுமே ரூ.3,500 கோடி முதல் ரூ.4,000 கோடி வரை முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்நிறுவனங்களை இந்திய மக்கள் புறக்கணிக்கத் தொடங்கினால், அமெரிக்க நிறுவனங்களுக்கே பெரும் இழப்பாகும்.

சுதேசி கொள்கையை வலியுறுத்தும் மோடி

அமெரிக்கா இந்தியா மீது 50% வரியை விதித்ததிலிருந்து மட்டுமல்லாமல், ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை எதிர்த்தும் மேலும் 50% வரியை அறிவித்துள்ளது. இதனால், இந்திய அரசு சுதேசி உற்பத்தியை ஊக்குவிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கியுள்ளது.

பிரதமர் மோடி கூறியதாவது, “இந்தியனை பொருளாதாரப் பெரிய சக்தியாக மாற்ற நாம் சொந்த உற்பத்தியை ஆதரிக்க வேண்டும். இந்திய வியர்வையைச் சிந்தி தயாரிக்கப்படும் பொருட்களை நாமே வாங்க வேண்டும்” எனத் தெரிவித்தார். உலக அரசியல் சுயநலத்தால் நிரம்பியுள்ளது என்றும், நம்முடைய நலனுக்காக நாமே பேச வேண்டிய நேரம் இது என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.