தமிழ் திரையுலகில் டான்ஸ் மாஸ்டராக இருந்து நடிகராகி பிறகு இயக்குனராக கலக்கி வருபவர் தான் பிரபுதேவா. அவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி சினிமாவிலும் பிரபலமாக உள்ளார். பிரபுதேவாவுக்கு முதல் மனைவியுடன் 3 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.

முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்ட சூழலில், பிரபுதேவா தன் மகன்களுடன் அடிக்கடி நேரம் செலவிட்டு வரக்கூடிய புகைப்படங்களும் வெளியாகி வந்தது. இந்த நிலையில் பிரபுதேவாவின் 2-ஆம் மனைவி ஹிமானி சிங்கிற்கு குழந்தை பிறந்திருக்கிறது.

திருமணமாகி 3 வருடங்கள் ஆகும் நிலையில் ஹிமானி சிங் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பிரபுதேவா குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை என்பதால் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.