90s-களில் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் நடிகை ரோஜா. இவர் கடந்த 1992ம் வருடம் ஆர்.கே.செல்வமணி டைரக்டில் பிரஷாந்த் நடிப்பில் வெளியாகிய “செம்பருத்தி” எனும் படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் இவர் தமிழ் மொழி திரைப்படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடித்து உள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த ரோஜா, அண்மை காலமாக முழுநேர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் ரோஜா உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அதாவது, ரோஜா கால்வீக்கம் காரணமாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.