ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் கூடுதலாகப் பணம் வசூலிக்கப்படுவதைக் தட்டிக் கேட்ட நுகர்வோரிடம், கடையின் ஊழியர்கள் பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ள சம்பவம் நுகர்வோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.நகர் டாஸ்மாக் மதுபானக் கடையில் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும் ஒவ்வொரு மதுபானப் பாட்டிலுக்கும், அதிகபட்ச சில்லறை விலையைக் காட்டிலும் கூடுதலாக ₹10 கட்டாயமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மதுபானத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகப் பணம் வாங்குவது குறித்து அங்கிருந்த பணியாளர்களிடம் வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கூடுதல் விலைப் புகாரைக் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டியதுடன், ஊழியர்கள் கொஞ்சமும் பயமின்றி,”வேண்டுமானால் முதல்வர் விஜய்க்கு இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்து அனுப்பிப் புகார் செய்யுங்கள்” என்று பொதுமக்களைப் பார்த்துத் திமிராகப் பதில் அளித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் அரசு மதுபானக் கடைகளில் எம்.ஆர்.பி விலையை விடக் கூடுதல் விலை வசூலிப்பதைத் தடுக்கக் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், சில கடைகளில் ஊழியர்களின் இது போன்ற அத்துமீறல்களும் அலட்சியப் போக்கும்கூடத் தொடர்வது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

“>

 

இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.