செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நீட் விலக்குக்கு தமிழக சட்டமன்றத்திலே ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி,  அதையும் கூட ஆளுநருடைய கையொப்பதோடு குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைத்தார். ஆனால் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். ஆனால் இதனால் வரை அதற்கு எந்தவிதமான பதிலும் வராத காரணத்தினால்,

குடியரசுத் தலைவர் சென்னைக்கு வந்த பொழுது அதை விண்ணப்பமாக அளித்திருக்கிறார்.  இன்று இளைஞரணியை வழிநடத்திச் செல்கின்ற இளைஞர் மேம்பாட்டு துறை, விளையாட்டு துறை அமைச்சராக இருக்கின்ற மாண்புமிகு அன்புச் சகோதரர் உதயநிதி அவர்களும் மாணவரணி, இளைஞர் அணி, மருத்துவர் அணி ஆகிய மூன்று அணிகளும் சேர்ந்து இந்த பணியை தமிழகத்தில் குறைந்தபட்ச ஐம்பது லட்சம் பேரிடமாவது  இந்த இயக்கத்தை கொண்டு சென்று….

அவர்கள் மூலமாக இங்கே கையெழுத்து இயக்கம் நடத்தும் என்று முடிவு செய்து இதில் கட்சி வேறுபாடு,  ஜாதி – மத வேறுபாடுகள் எதுவும் இல்லாமல் அனைவரும் ஒருங்கிணைந்து  நடத்த வேண்டும் என்று உதயநிதி அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க  தமிழகத்திலே  இது மும்மரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் தெற்கு மாவட்டத்தை நான்கு தொகுதிகள் இருக்கின்றன. நிச்சயமாக நான்கு தொகுதிகளிலும் குறைந்தபட்சம் 5 லட்சம் பேரிடமாவது இதை பரப்பி,  இதை இயக்குவோம்.

இதிலே அட்டையில்  கையெழுத்திடாமல்  தங்களுடைய தொலைபேசியிலே இருக்கிற ஆப்பை  பயன்படுத்தி…..  ஆப்-பில் கூட தொலைபேசி எண், பெயர், மாவட்டம், தொகுதி இதுவை நான்கையும் எழுதிவிட்டு கடைசியாக கையெழுத்திட்டு அனுப்ப வேண்டும் என்றும் மாண்புமிகு உதயநிதி அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் தான் இன்று மடாலயங்கள், தேவாலயங்கள்,

எல்லா  இஸ்லாமியர்களுடைய  கோயில்கள்,   பள்ளிவாசல்கள் அனைத்திற்கும் சென்று நாங்கள் இது போன்ற நடவடிக்கைகளை நம்முடைய இளைஞர் அணி மட்டுமல்ல மற்ற எல்லா அணிகளும் ஒருங்கிணைந்து அதை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கழகத் தோழர்கள் மட்டும் அல்ல… அனைத்து தோழமைக் கட்சிகளும் ஒருங்கிணைத்து இதனை செய்து கொண்டிருக்கிறோம்  தெரிவித்தார்.