திமுக தொடர்களிடம் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், உங்க எல்லாரையும் ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா பிராட்கேஸ்ட்ல சந்திக்கிற ஸ்டாலினின் வணக்கம். இந்த மூணாவது எபிசோடை தொடங்குவதற்கு முன்னாடி உங்ககிட்ட ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புறேன்.  செப்டம்பர் 23ஆம் தேதி வெளியான இரண்டாவது எபிசோட்ல சிஏஜி அறிக்கையில்சுட்டிக்காட்டப்பட்டிருந்த பிஜேபியோட ஏழு மெகா ஊழல்களை பத்தி பேசி இருந்தேன்.

அதெல்லாம் உண்மைன்னு ஒன்றிய அரசே ஒத்துக்குற மாதிரி ஒரு விஷயத்தை பண்ணிருக்காங்க. இந்தியா முழுக்க இந்த ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா ரிச் ஆன அப்புறம் அக்டோபர் இரண்டாம் வாரத்தில் ஒரு செய்தி வந்துச்சு. அதோட ஹெட்லைன் என்னன்னா….  பாஜக அரசோட ஊழல்களை  வெளிக்கொண்டு வந்த சிஏஜி அதிகாரிகள் அக்டோபர் 12ஆம் தேதி கூண்டோட மாற்றம். அது தான் அந்த செய்தி.

எவ்வளவு ஸ்பீடா ஆக்சன் எடுத்துருக்காங்க பாத்தீங்களா …? சரி அதே வேகத்துல இந்த எபிசோட்ல பேச போறதயும் உடனே கொடுக்கிறாங்களானு பார்ப்போம். இந்த எபிசோட்ல நான் பேச போறது மாநில உரிமைகள். டிஎம்கே தனக்கெனத் தனித்துவமான கொள்கைகளோட 75வது ஆண்டு விழாவை  கொண்டாடுகிற கட்சி மட்டும் அல்ல. இன்னைக்கு நாடாளுமன்றத்துல  இந்தியாவினுடைய மூணாவது பெரிய கட்சியா இருந்து இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற போராடும் கட்சியும் கூட..அப்படிப்பட்ட டி.எம்.கே. ஓட கொள்கைகளில்… முக்கியமானது மாநில சுயாட்சி என பேசினார்.