தேர்தல் தோல்விக்குப் பிறகும் திமுக நிலைப்பாடு குறித்து நடிகை கஸ்தூரி தனது பிரஸ் மீட்டில் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “தமிழ்ல குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலைன்னு சொல்லுவாங்க, அப்படிதான் இப்போதைய நிலைமையைப் பார்க்கிறேன்; ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றாலும் தோற்றதுதான், ஆனால் 83,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் பயங்கரமாகத் தோற்றுவிட்டார்கள்” என்று அவர் சாடியுள்ளார்.
அடுத்த 5 வருஷத்துக்கு உதயநிதி கதறுவதை பார்த்து ரசிக்கலாம் – Actress Kasthuri | TVK | Vijay | DMK | IBC Tamil #vijay #tvk #actresskasthuri #udhayanidhistalin #dmk #ibctamil pic.twitter.com/XCkjWf0gMe
— IBC Tamil (@ibctamilmedia) May 20, 2026
மேலும் பேசிய அவர், “தோற்றதை இன்னும் ஒப்புக்கொள்ள முடியாமல் உதயநிதி அவர்கள் அடுத்த ஐந்து வருடத்திற்கு கதறுவதை நாம் கேட்டு ரசிக்கலாம் போலிருக்கிறது, அதற்காகவே நான் இப்போ முதல்வர் விஜய்க்குப் பெரிய ஃபேன் ஆகிவிட்டேன்” என்று உதயநிதி ஸ்டாலினை ஓப்பனாக வம்புக்கு இழுத்து அதிரடி கமெண்ட் அடித்துள்ளார்!
