புதுச்சேரி சட்டப்பேரவையில் உருளையன்பேட்டை தொகுதி தவெக கூட்டணி கட்சி எம்.எல்.ஏ ஏ.நேரு பதவியேற்கும் போது, தேர்தல் விதிமுறைகளைத் தாண்டி கூடுதலாக “லஞ்சம் வாங்க மாட்டேன்” என்று கூறியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ நேரு அப்படிப் பேசியது தேவையற்றது என்று கூறிய புதுச்சேரி தற்காலிக சபாநாயகர், அந்தப் பகுதியைச் சட்டமன்றப் பதிவேட்டில் இருந்து நீக்க அதிரடியாக உத்தரவிட்டார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று உறுப்பினர்களின் பதவியேற்பு நடைபெற்றது. இதில் உருளையன்பேட்டையில் நேயம் கழகம் கட்சி சார்பில் வெற்றிபெற்ற ஜி.நேரு என்கிற குப்புசாமி லஞ்சம் வாங்க மாட்டேன் எனக் கூறி பதவியேற்றார். சட்டத்தின் படி உறுதியேற்பு தீர்மானத்தில் இல்லாத வார்த்தைகளைப்… pic.twitter.com/l3LzXB7z8C
— விகடன் (@vikatan) May 20, 2026
இதனை எதிர்த்து எம்.எல்.ஏ ஏ.நேரு சபாநாயகருடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது குறுக்கிட்ட தற்காலிக சபாநாயகர், “நீங்க மட்டும்தான் லஞ்சம் வாங்க மாட்டோம்னு சொல்றீங்களா?” எனக் கேட்டுச் சிரித்தது அங்கிருந்தவர்களிடையே பெரும் கலகலப்பை ஏற்படுத்தியது. சபாநாயகரின் இந்த நக்கல் கமெண்ட்டும், அதற்கு எம்.எல்.ஏ நேரு கொடுத்த ரியாக்ஷனும் தற்போது சோசியல் மீடியாக்களில் தீயாய் பரவி வருகிறது!
