ஐந்து ஆண்டுகள் மற்றும் 45 விசாரணைகள் நீடித்த நீண்ட சட்டப் போராட்டத்தில், ஆக்ராவைச் சேர்ந்த 63 வயதான அகர்வால் இந்திய ரயில்வேக்கு எதிராக 440 ரூபாய்க்கு போராடி வெற்றி பெற்றார். ஆக்ரா மாவட்ட நுகர்வோர் மன்ற நீதிமன்றம் அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இந்தத் தொகையை 7% வருடாந்திர வட்டியுடன் சேர்த்து ரயில்வே செலுத்த வேண்டும். 45 நாட்களுக்கு மேல் பணம் செலுத்த தாமதமானால்,

வட்டி 9% ஆக அதிகரிக்கும், மேலும் அகர்வாலுக்கு நிதி மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக சட்டக் கட்டணங்களுடன் கூடுதலாக ரூ. 8,000 கட்டாயமாக்கப்பட்டது. 2017ல் அகர்வால் 2வது ஏசி டிக்கெட்டை வாங்கியுள்ளார்.  ஆனால்,  ரயிலில் 2வது ஏசி கோச் இல்லாததால், குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்து புகார் அளிக்கப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை, அதே போல், செலுத்தப்பட்ட கூடுதல் பணம் திரும்பப் பெறப்படவில்லை, இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அகர்வால் சட்டப்பூர்வ வழிகள் மூலம் வழக்கைத் தொடர்ந்து தற்போது அதில் வெற்றியும் கண்டுள்ளார்.