கொல்கத்தாவில் ஏழு வயது சிறுவனான ரிஷப் குமார் என்பவர், தீபாவளி தினத்தன்று நண்பர்களுடன் சேர்ந்து பண்டிகையை கொண்டாட வெடி வெடித்து மகிழ்ந்து வந்துள்ளார்.  வெடி வெடிக்கையில் பாதுகாப்பான முறையில் வெடிக்க வேண்டும்  என பலவிதமான அறிவுறுத்தல்கள் பள்ளி தரப்பிலும்,  பெற்றோர்கள் தரப்பிலும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்தாலும் வெடிகளை ஆபத்தான கண்ணாடி பாட்டில்கள் மீது வைத்து வெடிப்பது தேவையற்ற பொருட்கள் மீது வைத்து வெடிப்பது என சிறுவர்கள் ஆபத்தை உணராமல்  வெடிகளை வெடித்து வருவதை ஒவ்வொரு வருடமும் பார்த்து வருகிறோம்.  அந்த வகையில், 

தகரம் ஒன்றின் மீது வெடியை வைத்து ரிஷப்குமார் வெடிக்க முற்பட்டபோது அது வெடித்து சிதறுகையில்,  தகரத்தின் சில துண்டுகள் அவரது இடது கண்களையும்,  கன்னத்தையும் பதம் பார்த்துள்ளது.  இதையடுத்து வீட்டில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட,  அடுத்த நாள், அவர் பாரக்பூரில் உள்ள திஷா கண் மருத்துவமனையில் சேர்க்கப்பட, சேதமடைந்த இடது கண்ணில்  அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.