தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராஜாதோப்பு கிராமத்தில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இச்சிதா(6), தர்ஷினி(4) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தர்ஷினி வீட்டிற்கு முன் பகுதியில் இருக்கும் விறகு அடுப்பிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தர்ஷினியின் உடையில் தீப்பற்றியது.

இதனால் அலறி துடித்த சிறுமியை படுகாயங்களுடன் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்ஷினி புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.