ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா மாநிலத்திற்கு தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நியமனம் செய்துள்ளது..

பாஜக ராஜஸ்தான் தேர்தல் பொறுப்பாளராக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் குல்தீப் பிஷ்னோய் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் தேர்தல் பொறுப்பாளராக ஓம் மாத்தூரும், இணை தேர்தல் பொறுப்பாளராக மன்சுக் மாண்டவியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் பாஜகவின் எம்பி மத்தியப்பிரதேச தேர்தல் பொறுப்பாளராகவும், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இணை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜக எம்பி பிரகாஷ் ஜவடேகர் தெலுங்கானா தேர்தல் பொறுப்பாளராகவும், சுனில் பன்சால் இணை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்..

https://twitter.com/ANI/status/1677277034039615489