கல்விக்காக வெளியூர் சென்ற மகன் 4 மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பியபோது, அவருக்கு தாய் கொடுத்த இன்ப அதிர்ச்சி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் கண்களைக் குளமாக்கி வருகிறது. அந்த வீடியோவில், தனது வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தாயார், வீட்டு வாசலில் வண்ணமயமான கோலமிட்டு, கையில் வண்ணக் காகிதங்கள் (Confetti) தூவும் வெடியுடன் கதவுக்குப் பின்னால் மறைந்து நிற்கிறார். தந்தை அழைத்து வர, எதையும் அறியாமல் வீட்டிற்குள் நுழையும் மகனை, தாய் திடீரென வந்து வரவேற்க, அந்த ஆச்சரியத்தில் மகன் உறைந்து போகிறார்.
కొన్ని నెలల తర్వాత కొడుకు కళాశాల నుండి ఇంటికి తిరిగి రావడంతో తల్లి మరియు కొడుకుల మధ్య భావోద్వేగ పునఃకలయిక.#mothersons #viralvideo pic.twitter.com/a5HqsPPMo4
— Telugu Stride (@TeluguStride) December 31, 2025
நீண்ட நாட்களுக்குப் பிறகு தாயைக் கண்ட மகிழ்ச்சியில் மகன் அவரை இறுக்கக் கட்டிப்பிடித்துக் கொள்ள, நெகிழ்ச்சியில் தாய் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார். இந்தத் தருணத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் தந்தை பெருமிதத்துடன் புன்னகைக்க, “பெற்றோரின் அன்பு ஈடு இணையற்றது” எனப் பதிவிட்டுள்ள இந்த வீடியோ, விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் மற்றும் வெளியூரில் பணிபுரியும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது
