தமிழகத்தில் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு கிட்டத்தட்ட நிறைவடைந்து, தற்போது வேட்பாளர் தேர்வு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தவிர மற்ற அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுடனும் சுமுகமாகத் தொகுதிகளைப் பகிர்ந்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த 4 நாட்களாகக் கள நிலவரங்களைத் துல்லியமாக ஆராய்ந்து, வேட்பாளர் பட்டியலைத் தயாரிப்பதில் முதல்வர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
மூத்த நிர்வாகிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் புதுமுகங்களுக்குச் சமமான வாய்ப்பளிக்கும் வகையில், ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்புள்ள நபர்களைத் தேர்வு செய்ய முதல்வர் சரியாகத் தூங்காமல் நள்ளிரவு வரை ஆலோசனைகளை நடத்தி இப்பட்டியலைத் தயார் செய்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமூக நீதி மற்றும் வெற்றி வாய்ப்பு ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு உருவாகியுள்ள இந்த ‘மெகா’ பட்டியல், திமுக தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
