தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தனது அண்ணா நகர் சொத்தை சுமார் ₹35 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக ‘The Week’ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி இப்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. விஜய் ஏன் திடீரென சொத்துக்களை விற்கத் தொடங்கியுள்ளார் என்பது குறித்துப் பலவிதமான தகவல்கள் உலவி வருகின்றன. குறிப்பாக, அடுத்த மாதம் (ஏப்ரல்) 20-ம் தேதி செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணைக்காக விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போது சொத்து விவரங்கள் கணக்கிடப்படும் என்பதால், முன்னெச்சரிக்கையாகச் சில சொத்துக்களை அவர் விற்று வருவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

​இன்னொரு பக்கம், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான செலவுகளைச் சமாளிக்கவே விஜய் இப்போதிலிருந்தே தனது சொத்துக்களைப் பணமாக மாற்றி வருகிறார் என்றும் பேசப்படுகிறது. “விவாகரத்து ஒரு பக்கம், அரசியல் இன்னொரு பக்கம்” என இரட்டைச் சவால்களை எதிர்கொண்டு வரும் விஜய், தனது மற்ற சில சொத்துக்களையும் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளாராம். 25 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இந்த விரிசல் மற்றும் அரசியல் களம் எனத் தளபதியின் அடுத்தடுத்த நகர்வுகள் தமிழகத்தையே உற்றுநோக்க வைத்துள்ளன. சொத்து விற்பனை குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளிவராத நிலையில், இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.