
செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், மதுரையில் நடைபெறும் மாநாட்டை ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய எழுச்சி மாநாட்டை… வலிமை வாய்ந்த மாநாட்டாக உருவாக்குகின்ற பணியிலே தமிழ்நாடு முழுக்க எல்லோரும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்திலே…. இங்கே மாநாட்டு திடலில் 25 லட்சம் பேர் பங்கேற்க கூடிய வகையில் பல்வேறு விதமான அரங்கங்கள், கண்காட்சி அரங்கங்கள், காட்சி அரங்கங்கள் உணவு கூடங்கள் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டிருக்கின்ற இந்த சூழலில்…
இன்றைக்கு தான் 20ஆம் தேதி என்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் மாநாடு இன்றே தொடங்கிவிட்டதோ என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்ற அளவுக்கு ஒரு மிகப்பெரிய பயிற்சியை கழக பேரவையின் மாநில செயலாளர்.. மரியாதைக்குரிய முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்பு சகோதரர் உதயகுமார் அவர்கள் பொறுப்பேற்று இருக்கக்கூடிய கழக அம்மா பேரவையின் சார்பில்….
இன்றைக்கு கிட்டத்தட்ட 3000 பேருக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. இதே இடத்தில ஒரு ராணுவ அணிவகுப்பை.. கழக பொதுச் செயலாளர்…. மரியாதைக்குரிய அண்ணன் எடப்பாடி அவர்களுக்கு பேரவையின் சார்பில், தொண்டர் படை சார்பில், பாசறை சார்பில் ஒரு ராணுவ அணிவகுப்பை செலுத்த இருக்கின்ற அந்த நிகழ்வை ஒட்டி… அதற்கான பயிற்சியை பேரவை செயலாளர் மரியாதைக்குரிய ஆர்.பி உதயகுமார் அவர்கள் அவர்களுடைய போர்படை தளபதிகளோடு… சிப்பாய்களோடு இன்றைக்கு பிரமாண்ட ஒரு பேரணியை நடத்தி, வீறுநடை போட்டு, அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய பயிற்சி இன்றைக்கு தொடங்கி இருக்கிறார். அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளை, வாழ்த்துக்களை நான் அன்போடு தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன் என தெரிவித்தார்.